Wednesday, October 13, 2010

உணவே மருந்து


வாழப் பிறந்தவனுக்கு தேவை விலை மதிப்பற்ற நல்வாழ்வு ஆகும்.
இத்தகைய நல்வாழ்வு பெறவேண்டியது அவனது கடைமையாகும், உரிமையும் ஆகும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

பிணிதீர்க்கும் மருத்துவ முறைகளில் தமிழகத்தில் மிகவும்
முக்கியமானதும்,முதன்மையானதும் சித்த மருத்துவம்.

அதிலும் குறிப்பாக மூலிகை மருத்துவம்.

நம் நாட்டில் சுமார் 2000 த்திற்கு மேற்பட்ட மூலிகைகளில்
தற்போது 500 மூலிகைகளை மட்டுமே
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்...

அறுசுவைகளான இனிப்பு, புளிப்பு,உப்பு,கைப்பு,கார்ப்பு,உவர்ப்பு
இவைகள் சம அளவில் சேர்ப்பதன் மூலம்
வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குணங்களையும சமன் செய்து
நோயின்றி வாழ முடியும்,


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

ஆம்

உண்ட உணவு நன்றாக சீரணித்த பின்னே அடுத்த வேளை உணவு உண்ண வேண்டும்
என்கிறார்
அய்யன் திருவள்ளுவர்.பத்தியம்நோய் மிகுக்ககூடியனவும் மருந்துக்கு எதரானவற்றையும விலக்குதலே பத்தியம் கடைப்பிடித்தலாகும்.
அதே சமயம் நோய் இல்லாமல் இருக்கும் காலத்தில்கூட பத்தியம் இருப்பது நோய் வராமல்
இருப்பதற்கான ஒரு மருத்துவமே.
ஆம் பத்தியம் என்பது நமது வாழ்நாளில் அன்றாடம் இல்லை வாரம் ஒருமுறை
இல்லை மாதம் ஒருமுறை பத்தியம் இருப்பது நமது வழக்கமாக உள்ளது.
வார நாட்களில் திங்கள்,செவ்வாய், வெள்ளி,சனிக்கிழமைகளில் விரதம் என்ற வகையில் பத்தியம் இருப்பார்கள். ஒரு வேளை மட்டும் உணவு, இருவேளை உணவு என்ற முறைகளிலும்
விரதம் கொண்டு நமது உடலுக்கு குறிப்பாக ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதால் அவற்றில் தேங்கியுள்ள அசுத்தங்கள் வெளியேற்றப்பட்டு நோய் தடுப்பாக அமைகிறது என்று கூறினால் மிகையாகாது
அதுமட்டுமல்ல பத்தியம் என்பது மிகச்சிறப்பாக கூறவேண்டுமானால் நமக்கு ஒத்துவராத உணவு பண்டங்களை உண்ணால் தவிர்ப்பது.
மற்றும் நோய்க்கு மருந்து உண்ணும்போது மருந்திற்கு ஒவ்வாமை பொருட்கள்
உண்ணாமல் தவிர்ப்பது பத்தியம்.
உணவே மருந்து என்று கூறும் போது பத்தியமே மருந்து என்றும் கூறலாம்.

Sunday, October 10, 2010

மனம் அது செம்மையானால்..

மனம் அது செம்மையானால்..

உறவுகள் மேம்பட
குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில்
விரிசல்கள் ஏற்படாமல் இருக்ககவும், ஏற்பட்ட
விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க......அன்பு ... அன்பு ....

அன்பு ஒன்றே போதும்.....கடவுள் எங்கும் இல்லை....
             நம்மிடையேதான் உள்ளார்...ஆம்
                            அன்புள்ளம் கொண்ட மனிதர்கள் தான் கடவுள்......

அன்பே சிவம்... அன்பே கடவுள்....


கீழ்கண்ட எண்ணத்தை விடுங்கள் அன்பு தானாகவே கடவுளாக நம்மை நாடி வரும்....

நானே பெரியவன். நானே சிறந்தவன் என் அகந்தையை விடுங்கள்..

அர்ததமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்ேடியருப்பதை விடுங்கள்,,,,,,

எந்த ஒரு விசயத்தையையும் பிரச்சனைளையும நாசுக்காக கையாளுங்கள்....
விட்டுக்ககொடுங்கள்....

சில நேரங்களில் சில சங்கடஙகளைச் சகித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணருங்கள்....

எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ
சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள்...

உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்....

மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும்
தவறாதீர்கள்..

புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை கூறவும் தவறாதீர்கள்..

பார்த்தும் பார்காதது போல் நடிக்காதீர்கள்...

பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கிவரவேண்டும் என்று நினைக்காமல்
நீங்களே முதலில் பேச்சைத் துவக்க முன் வாருங்கள்...

இந்த
        இனிய
                என்றும்
                        பயன் தரும்
                                 வார்த்தைகள்
                                           அன்பெனும் கடவுள்
                                                         நம்மிடையே வருவதற்கான
                                                                                                           படிக்கட்டுகள்...

Thursday, October 7, 2010

sample 1

எனது முதல் பதிவு
ஸ்ரீ ரமண மகரிஷி

Mjpaha; eLt[k; Mfp mstpyh mst[k; Mfpr;
nrhjpaha; czh;t[k; Mfpj; njhd;wpa bghUSk; Mfpg;
ngjpah Vfk; Mfpg; bgz;Qqkha; MQqk; Mfpg;
nghjpah epw;Fk; jpy;iyg; bghJelk; nghw;wp nghw;wp
-   nrf;fpHhh;