Wednesday, October 13, 2010

உணவே மருந்து


வாழப் பிறந்தவனுக்கு தேவை விலை மதிப்பற்ற நல்வாழ்வு ஆகும்.
இத்தகைய நல்வாழ்வு பெறவேண்டியது அவனது கடைமையாகும், உரிமையும் ஆகும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

பிணிதீர்க்கும் மருத்துவ முறைகளில் தமிழகத்தில் மிகவும்
முக்கியமானதும்,முதன்மையானதும் சித்த மருத்துவம்.

அதிலும் குறிப்பாக மூலிகை மருத்துவம்.

நம் நாட்டில் சுமார் 2000 த்திற்கு மேற்பட்ட மூலிகைகளில்
தற்போது 500 மூலிகைகளை மட்டுமே
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்...

அறுசுவைகளான இனிப்பு, புளிப்பு,உப்பு,கைப்பு,கார்ப்பு,உவர்ப்பு
இவைகள் சம அளவில் சேர்ப்பதன் மூலம்
வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குணங்களையும சமன் செய்து
நோயின்றி வாழ முடியும்,


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

ஆம்

உண்ட உணவு நன்றாக சீரணித்த பின்னே அடுத்த வேளை உணவு உண்ண வேண்டும்
என்கிறார்
அய்யன் திருவள்ளுவர்.



பத்தியம்நோய் மிகுக்ககூடியனவும் மருந்துக்கு எதரானவற்றையும விலக்குதலே பத்தியம் கடைப்பிடித்தலாகும்.
அதே சமயம் நோய் இல்லாமல் இருக்கும் காலத்தில்கூட பத்தியம் இருப்பது நோய் வராமல்
இருப்பதற்கான ஒரு மருத்துவமே.
ஆம் பத்தியம் என்பது நமது வாழ்நாளில் அன்றாடம் இல்லை வாரம் ஒருமுறை
இல்லை மாதம் ஒருமுறை பத்தியம் இருப்பது நமது வழக்கமாக உள்ளது.
வார நாட்களில் திங்கள்,செவ்வாய், வெள்ளி,சனிக்கிழமைகளில் விரதம் என்ற வகையில் பத்தியம் இருப்பார்கள். ஒரு வேளை மட்டும் உணவு, இருவேளை உணவு என்ற முறைகளிலும்
விரதம் கொண்டு நமது உடலுக்கு குறிப்பாக ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதால் அவற்றில் தேங்கியுள்ள அசுத்தங்கள் வெளியேற்றப்பட்டு நோய் தடுப்பாக அமைகிறது என்று கூறினால் மிகையாகாது
அதுமட்டுமல்ல பத்தியம் என்பது மிகச்சிறப்பாக கூறவேண்டுமானால் நமக்கு ஒத்துவராத உணவு பண்டங்களை உண்ணால் தவிர்ப்பது.
மற்றும் நோய்க்கு மருந்து உண்ணும்போது மருந்திற்கு ஒவ்வாமை பொருட்கள்
உண்ணாமல் தவிர்ப்பது பத்தியம்.
உணவே மருந்து என்று கூறும் போது பத்தியமே மருந்து என்றும் கூறலாம்.

1 comment:

  1. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

    பிணிதீர்க்கும் மருத்துவ முறைகளில் தமிழகத்தில் மிகவும்
    முக்கியமானதும்,முதன்மையானதும் சித்த மருத்துவம்.

    அதிலும் குறிப்பாக மூலிகை மருத்துவம்.


    சிறப்பான பயனுள்ள ப்கிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete